குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்க ஜனாதிபதி ஊடக சுதந்திரத்தைப் மீறிச் செயற்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின் நடவடிக்கைகள் ஊடகவியலாளர்களை பாதிக்கச் செய்யக் கூடுமென தெரிவித்துள்ள அவர் ட்ராம்ப் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான தகவல்களையும் வெளிப்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மெக்ஸிக்கோ பிரஜைகள் மற்றும் முஸ்லிம்கள் பற்றியும் அமெரிக்க ஜனாதிபதியின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனஅவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ட்ராம்ப் இனவாதத்திற்கு ஆதரவளிக்கின்றாரா என ஹூசெய்ன் கேள்வி எழுப்பியுள்ளார்.