குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆண்டு நிறைவு நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. சுதந்திரக் கட்சியின் 66ம் ஆண்டு நிறைவு நிகழ்வில் இதுவரையில் தமக்கு அழைப்பு எதுவும் விடுக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் சுதந்திரக் கட்சியின் பலருக்கு இதுவரையில் அழைப்பு எதுவும் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கோட்டே பகுதியில் நடைபெற்ற மதவழிபாட்டு நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.