165
கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 5 மணியளவில் யாழ் புங்கன்குளம் புகையிரத நிலையத்தில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் ஆசீர்வாதப்பர் வீதிப் பகுதியைச் சேர்ந்த 53 வயதான ஆர். அருள்நேசன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றார்கள்.
Spread the love