அதிமுகவின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் டிடி தினகரன் குழுக்களுக்கிடையில் இடையே மோதல் ஏற்படும் நிலை இருப்பதால் புதுக்கோட்டையில் நாளை வெள்ளிக்கிழமை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை டிடிவி தினகரன் அடிக்கடி மாற்றி வருவதனால் குழப்பநிலை தோன்றியுள்ளது. இந்தநிலையில் தினகரனால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் புதுக்கோட்டையில் நாளை எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க உள்ளனர். அதற்கு போட்டியாக எடப்பாடி அணியினரும் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க போவதாக அறிவித்துள்ளனர். இதனால் இரு அணிகளுக்கு இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதையடுத்து புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமையன்று 144 தடை உத்தரவு அமுலில் இருக்கும் எனஎன உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.