குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் முன்னாள் தலைவர் வெயன் ரூனியின் சாரதி அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் செலுத்தியதாக ரூனி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தாம் குடிபோதையில் வாகனத்தை செலுத்தியதாக ரூனி ஒப்புக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பளம் அற்ற வகையில் 100 மணித்தியாலயங்கள் சமூக தொண்டுகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் ரூனிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மன்னிக்க முடியாத குற்றத்தை இழைத்துள்ளதாகவும் தாம் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் ரூனி நீதிமன்றில் தெரிவித்துள்ளார். நீதிமன்றின் தீர்ப்பினை ஏற்றுக் கொண்டு அதன் அடிப்படையில் செயற்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வெயின் ரூணி குடிபோதையில் வாகனத்தினை செலுத்தினார் எனும் சந்தேகத்தில் கைது
Sep 1, 2017 @ 09:09
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இங்கிலாந்தின் முன்னாள் நட்சத்திர கால்பந்து வீரரான வெயின் ரூணி குடிபோதையில் வாகனத்தினை செலுத்தினார் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த வியாழக்கிழமை இரவு சேஷையரில் உள்ள அவரது வீட்டிற்கு அருகே அவர் காவல்துறையினரால் சோதனையிட்ட போது அவர் குடிபோதையில் வாகனத்தினை செலுத்தியமை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூணி கடந்த வாரம் சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்திருந்தார். 31 வயதான ரூணி இங்கிலாந்து அணிக்காக அதிக கோல்களை அடித்த வீரர் என்ற பெருமையைக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.