நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், ‘கட்சி கடந்து மாநிலம் கடந்து அனிதாவுக்காக வெகுண்டெழ வேண்டும்’ என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை நீட் பரீட்சைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து, இன்று தற்கொலை செய்துகொண்ட தமிழக மாணவி அனிதாவின் மரணத்திற்கு நடிகர் ரஜனிகாந்த்தும் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்திலே இரங்கலை வெளியிட்டுள்ளார்.அனிதாவின் தற்கொலை துரதிஸ்டவசமானது என்று கூறியுள்ள ரஜனிகாந்த் அவரது வேதனையை என் மனம் உணர்கின்றது என்றும் கூறியுள்ளார். தனது இதயத்தால் இரங்கலைத் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மாணவி அனிதாவின் சோக மரணம் தொடர்பில் மத்திய அரசே குற்றவாளி என மறுமலர்ச்சி தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.