குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரித்தானியாவின் கட்விக் குடிவரவு நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் தனியார் பாதுகாப்பு நிறுவனமான ஜி4எஸ் தனது பணியாளர்கள் ஓன்பது பேரை பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளது.
பிபிசியின் பனராமா நிகழ்ச்சியில் வெளியான தகவல்களை அடுத்தே ஜி4 எஸ் நிறுவனம் தனது பணியாளர்களை இடைநிறுத்தியுள்ளது. பிபிசியின் குறி;ப்பிட்ட நிகழ்ச்சி , தனியார் பாதுகாப்பு நிறுவன பணியாளர்கள் கட்விக்கில் தடுத்துவைக்கப்பட்டுள்ள குடியேற்றவாசிகளை தாக்கி துஸ்பிரயோகம் செய்யும் வீடியோ காட்சிகளை காண்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து விசாரணைகளிற்காக 9 பணியாளர்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தனியார் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட குற்றச்சாட்டு தொடர்பான ஆதாரங்களை பிபிசி நிறுவனம் இன்னமும் தங்களிடம் கையளிக்கவில்லை எனவும் ஆதாரங்கள் கிடைத்ததும் விசாரணைகள் மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜி4 எஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிபிசி குறிப்பிட்ட நிகழ்ச்சியை எதிர்வரும் திங்கட்கிழமை ஓலிபரப்புச்செய்யவுள்ளது.