212
இந்தியாவின் டெல்லியில் பெய்த மழையில் குப்பை மேடு ஒன்று திடீரென சரிந்து விழுந்ததால் அந்த வழியாக சென்ற 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அதில் சிக்கிய 4 பேரையும், சில வாகனங்களையும் மீட்பு படையினர் மீட்டுள்ளனர்.
கிழக்கு டெல்லியின் காஜிப்பூர் பகுதியில் அமைந்துள்ள இந்த குப்பைக்கிடங்கிலேயே டெல்லியில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் முழுவதும் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
டெல்லியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த குப்பைமேடு ஈரப்பதமாக இருந்த நிலையில், இன்று திடீரென சரிந்து வீதியில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love