155
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நியூயோரிக்கில நடைபெற்று வருகின்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் இரண்டாம் சுற்றுப் போட்டியொன்றில் ரபால் நடால் வெற்றியீட்டியுள்ளார். ஜப்பானின் டாரோ டெனிலை வீழ்த்தி நடால் வெற்றியீட்டியுள்ளார். 4-6 6-3 6-2 6-2 என்ற செற் கணக்கில் நடால், ஜப்பான் வீரரை வீழ்த்தியுள்ளார்.
121ம் நிலையை வகித்து வரும் டாரோவை, உலக டென்னிஸ் தர வரிசையில் முதல் நிலை வகிக்கும் நடால் கடும் போட்டியின் பின்னர் வீழ்த்தியிருந்தார். தாம் ஒவ்வொரு நாளும் முன்னேற்றமடைந்து வருவதாக நடால் தெரிவித்துள்ளார்.
Spread the love