162
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடகொரியா விவகாரம் குறித்து ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எச்சரிக்கை விடுத்துள்ளார். வடகொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நிலவி வரும் முரண்பாட்டு நிலைமை பாரிய மோதலாக வெடிக்கக் கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வடகொரியாவின் அணுத் திட்டம் குறித்து அழுத்தங்கள் பிரயோகிப்பது பிழையான விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார். முரண்பாடுகளை வளர்ப்பதனை விடவும் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதே சிறந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். நிபந்தனைகள் எதனையும் விதிக்காது நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் பொருத்தமானது என அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love