முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி கொலை தொடர்பான 199 வழக்குகளை கைவிட உள்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணை குழு முடிவெடுத்துள்ளதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த 199 வழக்குகளையும் ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய சிறப்பு குழுவை நியமித்துள்ளது. இந்தக் குழு எதிர்வரும் 5ம் திகதி முதல் செயல்பட்டு 3 மாதத்தில் 199 வழக்குகளையும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது. கடந்த மாதம் 16ம் திகதி இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த 1984-ம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதனையடுத்து ஏற்பட்ட கலவரத்தில் சீக்கியர்கள் பலர் கொல்லப்பட்டனர்.
முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி கொலை – சிறப்பு விசாரணை குழுவின் முடிவை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது:-
218
Spread the love