உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பில் திருத்தம் செய்யப்பட்டதன் எதிரொலியாக தமிழகத்தில் மூடப்பட்ட ஆயிரம் மதுபானக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரங்களில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ள மதுக்கடைகளை கடந்த மார்ச் 31ம் திகதிக்குள் முடிவிடுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் 2,800 மதுபானக்கடைகள மூடப்பட்டதுடன் மேலும் 1,183 மதுபானக்கடைகள் வேறு இடத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டன.
இந்தநிலையில் நகரங்களுக்கு இடையே இருக்கும் நெடுஞ்சாலையோரங்களில் உள்ள மதுக்கடைகளை மூடச்சொல்லவில்லை என்றும், 20 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளுக்கு அருகே அமைந்துள்ள நெடுஞ்சாலைகளை பொறுத்தவரை, அவற்றில் இருந்து 220 மீட்டர் தொலைவில் இருக்கும் மதுக்கடைகளை மூடினாலே போதுமானது எனவும் உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பில் சில திருத்தங்களை அறிவித்தது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் மூடிய கடைகளை உடனடியாக திறக்க டாஸ்மாக் நிறுவனம் உத்தரவிட்டது. அதன்படி, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மூடப்பட்ட சில மதுக்கடைகள் நேற்று மாலையில் திடீரென மீண்டும் திறக்கப்பட்டதமாக தெரிவிக்கப்பட்டுள்ளது