மெரினாவில் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபடுவோம் என முகப்புத்தகம் வட்ஸ்அப் போன்ற சமூகவலைத்தளங்கள் மூலம் தகவல் பரப்பு வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மருத்துவப் படிப்பு கனவு நிறைவேறாததால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித் தும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு கூடியதைப் போல், நீட் தேர்வை தடை செய்யக் கோரி சென்னை மெரினா கடற்கரையில் ஒன்று கூடுவோம் என சமூக வலைத் தளங்களில் தகவல் பரவி வருகிறது எனவும் இதனை பொதுமக்கள், மாணவர்கள் யாரும் நம்ப வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மெரினா கடற்கரையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் இது போன்ற தகவல்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.