ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போது அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா தனது தொலைபேசி உரையாடல்களை இடைமறித்து கேட்டதாக தற்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்த குற்றச்சாட்டை அமெரிக்க நீதித்துறை தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளது.
டொனால்டு டிரம்ப் கடந்த மார்ச் மாதம் , கடந்த ஆண்டு நவம்பர் 8ம் திகதி நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போது, குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட தனது தொலைபேசி உரையாடல்களை ஒபாமா, இடைமறித்து கேட்டு பதிவு செய்தார் எனவும் இது நிக்சனின் வோட்டர் கேட் ஊழல் போன்றது எனவும் குற்றம் சுமத்தியிருந்தார்.
எனினும் டிரம்பின் இந்த குற்றச்சாட்டை அமெரிக்க நீதித்துறை இப்போது திட்டவட்டமாக மறுத்துள்ளது.
அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பும் தேசிய பாதுகாப்பு பிரிவும் இதற்கான எந்தவொரு ஆதாரமும் காணப்படவில்லை என்பதை உறுதி செய்துள்ளதாக நீதித்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒபாமா குற்றமற்றவர் என்பதற்கு ஆதாரமாக அமைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.