100 கோடி ரூபா செலவில் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வது குறித்து ஆராயப்படுகின்றது பலாலி விமான நிலையத்தை 100 கோடி ரூபா செலவில் அபிவிருத்தி செய்வது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பலாலி பிரதேச உள்ளுராட்சி மன்றங்களிடம் இருக்கும் நிதியினை கொண்டு விமான நிலையத்தை சர்வதேச தரத்திலான விமான நிலையமாக மாற்ற வேண்டும் என விமான நிலைய அதிகார சபையின் இயக்குநர் எச் எம் சீ நிமால் ஸ்ரீ தெரிவித்துள்ளார். மேலும் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாக இந்திய அரசாங்கத்திடம் உதவி கோரப்பட்டுள்ளதாகவும் பதிலை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளர்.
பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வது குறித்து ஆராய்வு:-
150
Spread the love