நாட்டு மக்களுக்கு தற்போது தேசிய உணர்வென்பது இல்லாமல் போயுள்ளதென்றும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் சிறந்ததென தற்போது சிந்திப்பதாகவும் பெல்பொல விபஸ்ஸி அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பெல்பொல விபஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் கருத்துரைத்த அவர் நீதியமைச்சர் விஜயதாச பதவி நீக்கப்பட்டமை தொடர்பாக மேற்கண்டவாறு தெரிவித்துள்ளர்h.
தற்போது தமது தலைவர்களையும் மகாநாயக்கர்களையும் மோசமாக விமர்சிக்கும் ஒரு நிலை காணப்படுவதாகவும் இவ்வாறு சென்றால் நாடு அதள பாதாளத்தில் விழும் நிலை ஏற்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளர்h.
உண்மையை கூறினால் பொறுத்துக்கொள்ள முடியாமல் போகுமெனவும் நேர்மையானர்களை தேர்வு செய்து முக்கிய பதவிகளில் அமர்த்தினால் நாடு உரிய இலக்கை அடையுமெனவும் பெல்பொல விபஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார்.