நவம்பர் 17ம் திகதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டுமென என்று தேர்தல் ஆணையகத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக உள்ளாட்சி மன்றங்களின் பதவிக்காலம் முடிவடைந்து 11 மாதங்கள் ஆகியுள்ள போதிலும் தமிழகம் முழுவதும் உள்ள உள்ளாட்சி கட்டமைப்புகளின் பணிகள் முடங்கியுள்ளதாக எதிர்கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளநிலையில் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 17, 19 ஆகிய திகதிகளில்; உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த போதும் அந்த அறிவிப்பில் இடஒதுக்கீடுகள் முறையாக வழங்கப்படவில்லை என்று தி.மு.க. சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதையடுத்து உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு, உள்ளாட்சி நிர்வாகங்களை கவனிக்க தமிழக அரசு அதிகாரிகளை நியமித்தது.
எனினும் நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பதவிக்காலமும் கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்துள்ளதால், மேலும் 6 மாதத்திற்கு பதவி நீட்டிப்பு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலை எப்போது நடத்த முடியும் என்பது தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையம் அறிக்கை அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஆத்துடன் செப்டம்பர் 18ம் திகதிக்குள் உள்ளாட்சித்தேர்தலுக்கான அறிவிக்கையை வெளியிடவும் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.