குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சுவீடனிலிருந்து 107 வயது மூதாட்டி ஆப்கானிஸ்தானிற்கு நாடு கடத்தப்படுவதை தடுப்பதற்காக அவரது குடும்பத்தினர் தீpவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். ஆப்கானிஸ்தானிலிருந்து ஈரான், துருக்கி மற்றும் பால்கன் நகரங்கள் ஊடாக தனது 105 வயதில் சுவீடனை வந்து சேர்ந்த மூதாட்டியே தற்போது மீண்டும் நாடு திரும்பவேண்டிய ஆபத்தை எதிர்கொண்டுள்ளார்.
அவரது புகலிடக்கோரிக்கையை நிராகரித்துள்ள சுவீடனின் குடிவரவு துறையினர் அவர் நாடு திரும்பவேண்டும் என தெரிவித்துள்ளனர். 106 வயது மூதாட்டியை நாடு கடத்தவேண்டிய அவசியம் என்ன என்பது எங்களிற்கு தெரியவில்லை என அவரது குடும்பத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
106வயதில் அவரால் பார்க்க முடியாது கேட்க முடியாது பேசவும் முடியாது, அவர் நடக்கவும் மாட்டார். இந்த நிலையில் அவரை ஏன் நாடுகடத்தவேண்டும் என அவரது குடும்பத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கடந்த யூன் மாதம் அவரது புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின்னர் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர் தனது பேசும் திறனை இழந்துள்ளார் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சுவீடன் அதிகாரிகள் அவரது வயதை தாங்கள் கருத்தில் கொள்ளவில்லை எனவும் அவர் நாடு திரும்புவதற்கு உரியவர் எனக் கருதுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.