கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதியமைச்சரும், அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவருமான சரன குணவர்தனவை 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக செயற்பட்ட வேளையில் அரச வாகனங்களை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். சரன குணவர்தன பிரதியமைச்சராக பதவிலிருந்த போது அபிவிருத்தி லொத்தர் சபையில் கேள்வி பத்திர சபையின் தலைவராகவும் பணியாற்றியிருந்தார்.
அவ்வேளையில் அவர் 80 லட்சத்து 95 ஆயிரம் ரூபா பெறுமதியான சொகுசு வாகனத்தை கொள்வனவு செய்திருந்ததாகவும் குறித்த வாகனம் இதுவரை நிறுவனத்தில் பாவனையில் இல்லை எனவும் கொழும்பு குற்ற விசாரணை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.