குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் வெனிசுலாவின் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகளுடன் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். வெனிசுலாவின் எதிர்க்கட்சியின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோரையே பிரான்ஸ் ஜனாதிபதி சந்தித்துள்ளார்.
கடந்த வாரம் பிரான்ஸ் ஜனாதிபதி, வெனிசுலாவின் ஜனாதிபதி நிகலோஸ் மடூரோவை சந்தித்திருந்தார். வெனிசுலா ஜனாதிபதி நிகலோஸ் மாடுரோ சர்வாதிகார ஆட்சி நடத்தி வருவதாகவும் எதிர்க்கட்சியினரை ஒடுக்கி வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டு வரும் நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி , வெனிசுலாவின் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகளுடன் சந்திப்பை நடத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது