164
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா விமர்சனம் செய்துள்ளார். வாக்குகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி கருத்து வெளியிடுகின்றார் என்ற அர்த்தத்தில் சரத் பொன்சேகா கருத்து வெளியிட்டுள்ளார்.
குற்றவாளிகளை தண்டிக்கப் போவதில்லை என அரசியல்வாதி ஒருவர் கூறினால் அது வாக்குகளை இலக்கு வைத்தே தவிர வேறு எதுவுமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜெனரல் ஜகத் ஜயசூரிய மீது எந்தவொரு வெளிநாட்டு சக்தியும் கை வைக்க இடமளிக்கப்படாது என அண்மையில் ஜனாதிபதி கூறியதனை மறைமுகமாக சுட்டிக்காட்டியே சரத் பொன்சேகா இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love