குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் எனப்படும் திட்டமிட்ட இன அழிப்பின் 27வது நினைவு தின நிகழ்வுகள் இன்றையதினம் ஏறாவூர் மாவடிப் பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்றது.
செப்டம்பர் 5, 1990 ஆம் ஆண்டு, அன்று, மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்த அப்பாவித் தமிழ் அகதிகள் 158 பேர் இலங்கை இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வே கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் என இனப்படுகொலை வரலாற்றில் நினைவுகூறப்படுகிறது.
இந்தநிலையில் இன்றைய தினம் காணாமல்போன உறவினர்களின் நினைவுக் குழுவின் சார்பில் விசேட பூசை வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.