197
அந்தமான் தீவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.4ஆக பதிவாகியுள்ளது. தலைநகர் போர்ட் பிளேரில் இருந்து சுமார் 160 கி.மீ. தூரத்தில் 86.8 கி.மீ. ஆழத்தில் இன்று அதிகாலை 5 மணிக்கு இந்த நில நிடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ அல்லது பொருள்கள் சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் ஏதும் இல்லை. கடந்த ஓகஸ்ட் மாதம் 10ம் திகதியும் அந்தமான் தீவில் சுமார் 10 கி.மீ. ஆழத்தில் 5.0 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love