குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடகொரியாவின் கண்மூடித்தனமான நடவடிக்கைகள் குறித்த அமெரிக்க ஜனாதிபதியின் நிலைப்பாட்டினை தான் ஏற்றுக்கொள்வதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதிக்கும் அவுஸ்திரேலிய பிரதமருக்கும் இடையில் இன்று காலை இடம்பெற்ற 30 நிமிட தொலைபேசி உரையாடலிற்கு பின்னரே மல்கம் டேர்ன்புல் இதனை தெரிவித்துள்ளார்
வடகொரியாவிற்கு எதிரான கடுமையான பொருளாதார தடைகளே மோதல் ஓன்றை தவிர்ப்பதற்கான மிகச்சிறந்த வழிமுறையாக காணப்படுவதாக டேர்ன்புல் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வடகொரியா நிர்வாகத்திற்கு எதிராக வேறு என்ன நடவடிக்கைகளை எடுப்பது குறித்து டிரம்ப் சிந்தித்து வருகின்றார் என்பது குறித்து டேர்ன்புல் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார்.
டிரம்புடனான அரைமணித்தியால உரையாடல் சிறந்த நட்புணர்வின் அடிப்படையில் காணப்பட்டதாக தெரிவித்துள்ள டேர்ன்புல் வடகொரியாவின் கண்மூடித்தமான நடவடிக்கைகளை கண்டிப்பதில் நாங்கள் ஓரே நிலைப்பாட்டை ஓரே மாதிரியா கருத்தை கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
தற்போதைய தடைகளை முழுமையான நடைமுறைப்படுத்துவது மற்றும் எதிர்கால தடைகள் குறித்து நாங்கள் ஆராய்ந்தோம் என தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர் வடகொரியா விடயத்தில் சிறந்த செல்வாக்கு செலுத்தும் நிலையில் சீனா காணப்படுவதாகவும் குறிப்பிட்டு;ள்ளார்.