குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிரிய அரசாங்கப் படையினர் பல தடவைகள் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் யுத்தக் குற்றச் செயல் விசாரணையாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். அரசாங்க யுத்த விமானம் ஒன்று இட்லிப் மாகாணத்தில் நடத்திய இரசாயன ஆயுத தாக்குதல்களில் 80 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சாரீன் என்னும் இரசாயனம் உள்ளடங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிரிய அரசாங்கப் படையினர் சுமார் 12 தடவைகளுக்கு மேல் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.