150
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பயங்கரவாதத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியாதவற்றை அரசியல் சாசனத்தின் ஊடாக கொடுக்க வேண்டாம் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். படைவீரர்களை சர்வதேச நீதிமன்றிற்கு கொண்டு சென்று தண்டனை விதிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களே புதிய அரசியல் சாசனம் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனவே, பயங்கரவாதத்தின் ஊடாக அடைய முடியாது போன இலக்குகளை புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக வழங்கப்படக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார். வெளிச்சம் என்ற அமைப்பின் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்றிருந்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love