பீஹாரில் கடந்த ஆண்டு காரில் சென்றபோது தன்னை முந்திச் சென்ற பாடசாலை மாணவனை சுட்டுக் கொன்ற முக்கிய அரசியல்வாதி ஒருவரின் மகன் உட்பட 3 பேருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி உள்ளது.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முக்கிய பிரமுகர் மனோரமா தேவியின் மகன் ராக்கி யாதவ் மற்றும் மூவர் காரில் பயணம் செய்த போது, அவர்களது காரை முந்திச்’ சென்றதற்காக 17 வயதான ஆதித்யா சச்தேவா என்ற மாணவரை சுட்டுக் கொன்றிருந்தனர்
இதையடுத்து, மனோரமா தேவி ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதுடன் இதனிடையே, இதுதொடர்பாக கயா நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் விசாரணை முடிந்ததையடுத்து, ராக்கி யாதவ், டெனி, ராகேஷ் குமார் ரஞ்சன் ஆகிய மூவரும் குற்றவாளி என நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில் மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மேலும் குற்றச்சதியில் ஈடுபட்டதாகக் கூறி, ராக்கி யாதவின் தந்தையும் தொழிலதிபருமான பிந்தி யாதவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.