குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வெளிமாவட்டங்களில் இருந்து வந்து நடைபாதை வியாபாரத்தை மேற்கொள்ளும் வியாபாரிகள் மற்றும் தென்னிந்திய வியாபாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டு உள்ளது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் நடைபெற்றது. அதன் போதே குறித்த பிரேரணையை மாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் ஜெயசேகரம் முன் மொழிந்தார்.
அதன் போது அவர் உரையாற்றுகையில் ,
வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தரும் வியாபாரிகள் மேற்கொள்ளும் வியாபர நடவடிக்கைகளால் நிரந்தர வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றார்கள். பண்டிகைகாலங்களில் வெளிமாவட்டங்களில் இருந்து படையெடுத்து வரும் வியாபாரிகள் நடைபாதை வியாபரத்தை மேற்கொள்வதனால் , நிரந்தர வியாபரத்தை மேற்கொள்ளும் வியாபாரிகள் நஷ்டத்தை எதிர்நோக்குகின்றார்கள்.
அதேபோலவே தென்னிந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் வரும் வியாபாரிகள் மேற்கொள்ளும் வியாபர நடவடிக்கைகளால் இங்குள்ள வியாபாரிகள் பாதிக்கபப்டுகின்றனர். எனவே வெளிமாவட்ட வியாபரிகள் , தென்னிந்தியா வியாபரிகள் , வியாபரம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.
அதற்கு பதிலளித்த முதலமைச்சர் , இது தொடர்பிலான நியதி சட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது எனவும் அதில் சில திருத்தங்கள் மேகொள்ள வேண்டிய தேவை உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். அந்த திருந்தங்கள் மேற்கொண்டதும் , சட்டம் சபையில் நிறைவேற்றப்பட்டு அந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என தெரிவித்தார்.