முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த கொழும்பு மேல் நீதிமன்றம் தலா மூன்று வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
அத்துடன் தலா 50 லட்சம் ரூபாய் தண்டப்பணமும் விதித்துள்ளதுடன் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு தலா 50 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டு தொலைத் தொடர்பு ஆணைக்குழுவுக்கு சொந்தமான 600 மில்லியன் ரூபாவை பயன்படுத்தி சீல் துணிகளை விநியோகம் செய்தமை தொடர்பில் இவர்களுக்கு எதிராக குற்றம்சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.