குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓரு பால் திருமணம் குறித்து மக்களின் கருத்தினை அறிவதற்கான தபால் மூல வாக்களிப்பை நடத்தும் தனது திட்டத்தை முன்னெடுப்பதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கியுள்ளது. ஓரு பால் திருமணம் குறித்த தபால் மூல வாக்கெடுப்பினை நடத்தும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிரான இரு மனுக்களை ஆராய்ந்த பின்னர் அவற்றை இரத்துச்செய்துள்ளதன் மூலம் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
இதேவேளை ஓரு பால் திருமணத்திற்கு ஆதரவாக பெரும்பான்மையான மக்கள் வாக்களித்தால் அது குறித்த சட்டம் இந்த வருடத்திற்குள் திருத்தப்படும் என பிரதமர் மல்கம் டேர்ன்புல் தெரிவித்துள்ளார். அனைத்து அவுஸ்திரேலியர்களும் தங்கள் கருத்து கருத்தில்கொள்ளப்படுவதை உறுதிசெய்வதற்காக இந்த வாக்கெடுப்பி;ல் பங்குபெற வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.