168
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கரீபியன் தீவுகளில் ஏற்பட்டுள்ள இர்மா புயல் காற்றினால் 14 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். தாழ்வாகக் காணப்படும் தீவுகளில் அதிகளவான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. புயல் காற்று காரணமாக தாழ்வான தீவுப் பகுதிகளில் சுமார் இருபது அடி உயரமான கடல் அலைகள் எழக்கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மணிக்கு 280 கிலோ மீற்றர் என்ற வேகத்தில் புயற்காற்று வீசுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இர்மா புயல் காற்று மற்றும் மழை வெள்ளத்தினால் 1.2 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த எண்ணிக்கை 26 மில்லியனாக உயர்வடையக் கூடும் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
Spread the love