குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அவுஸ்திரேலியர்கள் 26 ஆயிரம் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருப்போர் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கியுள்ள பொது மன்னிப்புக் காலத்தில் இந்த ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கடந்த ஜூலை மாதம் 1ம் திகதி தொடக்கம் இந்த பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது.
தீவிரவாத அச்சுறுத்தல்கள் மற்றும் அதிகரித்து வரும் அயுதக் கலாச்சாரம் ஆகியன காரணமாக இவ்வாறு சட்டவிரோத ஆயுதங்களை திரட்டும் நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. பதிவு செய்யப்படாத ஆயுதமொன்றை வைத்திருப்பது அவுஸ்திரேலியாவில் சட்டவிரோதமானது என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருப்போருக்கு 14 ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனையும் 2 லட்சத்து 25000 அமெரிக்க டொலர்கள் அபராதமும் விதிக்கப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலியாவில் மொத்தமாக 2 லட்சத்து 60,000 சட்டவிரோத ஆயுதங்கள் காணப்படலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.