குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பக்கச்சார்பற்ற வகையில் விசாரணை நடத்தினால் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறையில் இருக்க வேண்டியிருக்கும் என ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது. சட்ட மா அதிபர் திணைக்களம் 89 முறைப்பாடுகள் குறித்த விசாரணைகளை உரிய முறையில் நடத்தினால் பலர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்கள் என ஜே.வி.பி.யின் சிரேஸ்ட உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
பல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்ட போதிலும் நீதிமன்றில் இதுவரையில் ஒரு வழக்கு கூட தொடரப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அரசாங்கம் கூட்டு அரசாங்கம் அல்ல எனவும் கூட்டாக இணைந்து மோசடி செய்யம் அரசாங்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாரிய மோசடிகளில் ஈடுபட்ட அமைச்சர்கள் தொடர்பிலான தகவல்கள் விரைவில் அம்பலப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.