182
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இர்மா புயல் காற்று அமெரிக்காவை மோசமாக தாக்கும் என அமெரிக்க மத்திய அவசர முகவர் நிறுவனத்தின் தலைவர் புரொக் லொங் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புளொரிடா அல்லது அதனை அண்டிய மாநிலங்களில் புயல் காற்றுத் தாக்கம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் புளொரிடாவின் அநேக பகுதிகளில் மின்சார இணைப்பு துண்டிக்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுமார் அரை மில்லியன் மக்கள் சொந்த இடங்களை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு அறிவிக்கப்பட்டுள்ளனர். கரீபியன் தீவுகளில் இர்மா புயல் காற்று காரணமாக 20க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love