ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழுவின் இன்றைய சென்னைக் கூட்டத்தில் இறுதி முடிவு…
புதிய ஓய்வுதியத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அடுத்த நடவடிக்கை குறித்து சென்னையில் இன்று நடைபெறவுள்ள ஜாக்டோ – ஜியோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என அதன் புதிய மாநில ஒருங்கிணைப்பாளர் ஏ.மாயவன் தெரிவித்துள்ளார்
ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கலந்துகொண்டதுடன் ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷமிட்டனர்.
முதல் நாள் இடம்பெற்ற போராட்டத்தில் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர் எனவும் 2 லட்சம் பேர் கைதுசெய்யப்பட்டனர் எனவும் அதன் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் உயர்நீதிமன்ற உத்தரவு குறித்தும் ஆலோசிக்க ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு கூட்டம் சென்னையில் உள்ள அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் இன்று மாலை நடைபெறவுள்ளதாகவும் இந்த கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளர்h.
மேலும் புதிய ஓய்வுதியத் திட்டம் ரத்துசெய்யப்படும் என்று முதலமைச்சர் உறுதிமொழி தந்தால் உடனடியாக போராட்டத்தை கைவிட்டுவிடுகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளர்h.