நாசிக்கில் உள்ள அரசு வைத்தியசாலையில் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் புதிதாக பிறந்த 55 குழந்தைகள் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் சுமார் 70 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவத்தினை தொடர்ந்து அங்குள்ள பரூக்காபாத் மாவட்ட அரசு மருத்துவமனையிலும் ஒரு மாதத்தில் மட்டும் 49 குழந்தைகள் உயிரிழந்தமை தெரிய வந்தது. இந்தநிலையில் தற்பொழுது நாசிக்கில் உள்ள அரச மருத்துவமனையிலும் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் புதிதாக பிறந்த 55 குழந்தைகள் இறந்துள்ள சம்பவம் வெளிவந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரையில் அந்த மருத்துவமனையில் 187 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி சுரேஷ் ஜகதாலே தெரிவிக்கையில் இறந்த குழந்தைகளில் பெரும்பாலானவர்கள், தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, குணம் அடைவதற்கான வாய்ப்பு மிகக்குறைவுதான் என்ற நிலையில் கொண்டு வரப்பட்டவர்கள் எனத் தெரிவித்துள்ளர்.
மேலும் உரிய காலத்துக்கு முன்பே குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளும், நுரையீரல் பலவீனமான குழந்தைகளும் இறந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளர்h.