154
வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்ப பிரச்சனை காரணமாகவே அவர் கொலை செய்ய்ப்பட்டிருக்கலாம் என காவல்துறை தரப்புகள் தெரிவிக்கின்றன. நேற்று மாலை குறித்த சம்பவம் வவுனியா, பாலமோட்டை, கிழவிகுளம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும் கொல்லப்பட்டவர் மூன்று பிள்ளைகளின் தந்தையான 36 வயதான பாலைய்யா சுதாகரன் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவி மற்றும் அவரது சகோதரர்கள் உட்பட நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love