167
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் இன்று (09) மாலை ஏற்பட்ட வாள் வெட்டு சம்பவத்தில் ஒருவா் வாள் வெட்டுக்கு இலக்காகியதுடன் உந்துருளியும் எரிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று மாலை 5.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி இரணைமடு கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி காவல்துறை அதிபா் அலுவலகத்திற்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாள் வெட்டுக்குள்ளானவா் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.
Spread the love