நேற்று இடம்பெற்ற சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினைச் சேர்ந்தவர்களை மக்கள் குறித்த நிகழ்வில் கலந்து கொள்ளவிடாது தடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் 1990ம் ஆண்டு 186 தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதன் 27ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சத்துருக்கொண்டான் சந்தியில் உள்ள நினைவுத் தூபியில் நேற்று மாலை இடம்பெற்றது.
படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளுக்கு இதுவரை நீதி பெற்றத்தரவில்லை எனவும் இந்த நினைவேந்தல் நிகழ்வில்
அரசியல் செய்யக் கூடாது எனவும் தெரிவித்த மக்கள் அவர்களை அங்கு உரையாற்றவோ தீபச்சுடர் ஏற்றவோ அனுமதிவிக்கவில்லை எனகுறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வியாழேந்திரன், சீ. யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபை விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம், பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கோ.கருணாகரன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் ஆகியோர் கலந்து கொள்ளச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.