அமெரிக்காவின் தெற்கு புளோரிடா மாகாணப் பகுதியில் உள்ள தீவுக்கூட்டத்தை இர்மா சூறாவளி தாக்கியுள்ளது. அதனை நான்காம் வகை புயல் என்று வகைப்படுத்தியுள்ள வானியல் ஆய்வாளர்கள் புயல்களிலேயே இரண்டாவது அதிக சக்தி வாய்ந்ததாக இவ்வகைப் புயல்கள் கருதப்படுகின்றன எனத் தெரிவித்துள்ளனர்.
புளோரிடா கீஸ் என அழைக்கப்படும் தீவுக்கூட்டத்தின் தாழ்வான பகுதிகளை மணிக்கு 209 கிலோ மீற்றர் வேகத்தில் இந்த சூறாவளி தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தச் சூறாவளியினால் உயிராபத்து ஏற்படக் கூடும் என்பதனால் அம்மாகாணத்தில் இருந்து 63 லட்சத்துக்கும் மேற்பட்டோரை வெளியேற பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் கோரியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த சூறாவளியானது புளோரிடா கீஸ் தீவுகளைத் தாக்கியபின், வடக்கு நோக்கி புளோரிடா மாகாணத்தின் பிரதான நிலப்பரப்பை அடையும்போது ஆயிரக்கணக்கான வீடுகளில் மின் விநியோகம் தடைபடும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை அங்கு சுமார் 50,000 பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
கியூபா, செயின்ட் மார்ட்டின் தீவுகள், டர்க்ஸ் மற்றும் கொகோஸ் தீவுகள், பார்புடா தீவு, போர்டோ ரிகோ, பிரிட்டிஷ் வர்ஜின் தீவுகள், அமெரிக்க வர்ஜின் தீவுகள், ஹைத்தி மற்றும் டோமினிக்கன் குடியரசு ஆகிய பகுதிகளும் இந்த சூறாவளியால் பரவலாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

A police car patrols the beach in anticipation for Hurricane Irma, in Hollywood, Fla., Saturday, Sept. 9, 2017. (Paul Chiasson/The Canadian Press via AP)