குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பெற்றோல் மற்றும் டீசல் வாகனங்களை தடை செய்வதற்கு சீன அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய கார் சந்தைகளில் ஒன்றாக சீனா கருதப்படுகின்றது. இந்த நிலையில் பெற்றோல் மற்றும் டீசலைக் கொண்டு இயங்கும் கார், வேன் வகைகளை தடை செய்வதற்கு சீனா திட்டமிட்டுள்ளது.
சீனாவின் பிரதி கைத்தொழில் அமைச்சர் Xin Guobin told Xinhua இது பற்றி அறிவித்துள்ளார். எனினும் எப்போது இந்த தடை அமுல்படுத்தப்படும் என்ற விபரங்கள் வெளியிடப்படவில்லை. கடந்த ஆண்டில் சீனா 28 மில்லியன் கார்களை உற்பத்தி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இலத்திரனியல் பற்றரிகளைக் கொண்ட கார்களை அறிமுகம் செய்வதில் சீனா ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.