161
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு தொகுப்புரைக்காக நாளைய தினம் செவ்வாய்கிழமை நீதாயவிளக்கம் ( ரயலட் பார் ) கூடவுள்ளது. புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாயவிளக்கம் ( ரயலட் பார் ) முறைமையில் நாளை நடைபெற்றவுள்ளது.
வழக்கு தொடுனர் தரப்பு சாட்சி பதிவுகள் , மற்றும் எதிரிகள் தரப்பு சாட்சி பதிவுகள் கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில் , நாளைய தினம் செவ்வாய்க்கிழமை இரு தரப்பின் தொகுப்புரைக்காக கூடவுள்ளது. நாளை மற்றும் நாளை மறுதினம் புதன்கிழமை இரு தரப்பு தொகுப்புரைக்காகவும் மன்றினால் திகதியிடப்பட்டு உள்ளது.
இரு தரப்பின் தொகுப்புரைகளும் முடிவடைந்த பின்னர் தீர்ப்பு வழங்குவதற்கான திகதியினை நீதிபதிகள் அறிவிப்பார்கள். பெரும்பாலும் வார இறுதிக்குள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்க படுகின்றது.
பின்னணி.
புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவி சிவலோகநாதன் வித்தியா கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்கு செல்லும் வழியில் கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்டார்.
இக் குற்ற செயலுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் 9 பேரினை சட்டமா அதிபர் திணைக்களம் எதிரிகளாக கண்டு நீதாயவிளக்கம் ( ரயலட் பார் ) முறைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Spread the love