டெல்லியின் குருகிராம் பகுதியில் உள்ள ரயான் சர்வதேச பாடசாலை ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை 7 வயது மாணவர் ஒருவர் கழிவறை அருகில் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக அவரது தந்தை தொடர்ந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என சிறுவனின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது நாடு முழுவதும் உள்ள தனியார் பாடசாலைகளில் நிகழும் பாதுகாப்பு குறைபாடுகளை கவனத்தில் கொண்டு இந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்று கொண்டுள்ளது என நீதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த கொலை தொடர்பாக பாடசாலை பேருந்து நடத்துனர் அசோக் குமார் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரைணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் பாடசாலையின் அலுவல் அதிகாரிகள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாதுகாப்பில் குறைபாடு இருந்ததாகக் கூறி, சிறுவர் நீதிச் சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.