163
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிரிமியா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருக்கு ரஸ்ய நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. கிரிமியாவின் எதிர்க்கட்சித் தலைவர் அக்தெம் சியோஜஸ் ( Akhtem Chiygoz) க்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எட்டு ஆண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. போராட்டங்களை வெடிக்கச் செய்ததாகத் தெரிவித்து இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கிரிமியாவில் டாட்டர்ஸ் இனத்தவர்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை அக்தெம் சியோஜஸ்க்கு தண்டனை விதிக்கப்பட்டமைக்கு உக்ரேய்ன் கண்டனம் வெளியிட்டுள்ளது.
Spread the love