குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மியன்மாரில் இனச் சுத்திகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது. மியன்மாரில் ரோஹினிய முஸ்லிம்கள் ஒடுக்கப்படுவதாகவும் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் இதனைத் தெரிவித்துள்ளார். மியன்மாரின் ராகீனி மாநிலத்தில் இவ்வாறு இனச்சுத்திகரிப்பு இடம்பெறுவதாகத் தெரிவித்துள்ளார்.
ரோஹினிய ஆயுததாரிகள் நடத்தும் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுப்பதாக மியன்மார் படையினர் தெரிவிக்கின்றனர். எனினும், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக ரோஹினிய போராட்டக்குழுவினர் குற்றம் சுமத்துகின்றனர். இந்தநிலையில் இந்த கொடூரமான இராணுவ நடவடிக்கைகளை அரசாங்கம் தடுத்து நிறுத்திக் கொள்ள வேண்டுமென அல் ஹூசெய்ன் கோரியுள்ளார்.