குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வெலிக்கடைச் சிறைச்சாலை கொலைகள் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் இவ்வாறு கோதபாய ராஜபக்ஸவிடம் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர், முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய, முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்க ஆகியோரிடம் இவ்வாறு விசாரணை நடத்தப்பட உள்ளது. இராணுவ மற்றும் காவல்துறை உத்தியோகத்தர்களிடம் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 27 கைதிகள் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது