நோர்வேயில் நேற்றையதினம் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் அந்நாட்டின் கன்சவேற்றிவ் ஆளும் கூட்டணிக் கட்சி வெற்றியீட்டியுள்ளது. இதனையடுத்து தற்போதைய பிரதமரான எர்னா சொல்பேர்க் ( Erna Solberg) இரண்டாவது தடவையாகவும் ஆட்சியமைக்கவுள்ளார்.
இதுவரையில் எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில், ஆளும் கூட்டணிக் கட்சி 169 ஆசனங்களில் 89 ஆசனங்களைப் பெற்று முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை இந்தத் தேர்தலில் எர்னா சொல்பேர்க்கை எதிர்த்துப் போட்டியிட்ட தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜோனஸ் ஹர் ஸ்ரோர் (Jonas Gahr Støre) தோல்வியடைந்துள்ளார்.
இந்தநிலையில் தேர்தல் பிரசாரங்களின்போது, தங்களால் முன்வைக்கப்பட்ட தீர்மானங்கள் வெற்றி அளித்துள்ளன என எர்னா சொல்பேர்க் தெரிவித்துள்ளார். எர்னா வரிக் குறைப்பு மூலம் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தல் என்பதனை கருப்பொருளை முன்வைத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.