குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறிய பின்னரும் பிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்துடன் வெளிவிவகார கொள்கைகளில் உடன்படலாம் என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் பொறிஸ் ஜோன்சன் பாதுகாப்பு விவகாரங்களிலும் இணக்கப்பாடு காணப்படலாம் என தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கான பிரித்தானியாவி;ன்; அர்ப்பணிப்பில் குறைவு ஏற்படாமல் இருப்பது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த சில வருடங்களாக ஐரோப்பிய ஓன்றியம் முக்கியமான வெளிவிவகார கொள்கைகளில் வெற்றிபெறுவதற்கு உதவியுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் நாங்கள் வெளியேறிய பின்னரும் ஐரோப்பிய ஓன்றியத்தின் இந்த பங்களிப்பு தொடரவேண்டும் என விரும்புகின்றோம் எனத் தெரிவித்தார்.
இதன் காரணமாகவே பிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறிய பின்னரும் வெளிவிவகார பாதுகாப்பு விவகாரங்களில் வலுவான ஓத்துழைப்பு நிலவவேண்டும் என நாங்கள் விரும்புகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இது உலகலாவிய ரீதியில் நாங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை முகம்கொடுப்பதற்கு உதவியாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.