குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் தொழிலாளர் சீர்திருத்த திட்டத்திற்கு எதிராக தொழிற்சங்கங்கள் இன்று கதவடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளன, ஜனாதிபதியின் தொழிலாளர் சீர்திருத்த திட்டத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் 180 ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நிலையில் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன.
பிரான்சின்; மிக முக்கியமான சிஜிடி 4000 இல் பணிபகிஸ்கரிப்பு போராட்டங்கள் நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளதுடன் புகையிரத பணியாளர்கள் மாணவர்கள் அரச துறையினரை போராட்டங்களில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது.
விமானக்கட்டுப்பாட்டு பணிகளில் உள்ளவர்களும் பணிபகிஸ்கரிப்பி;ல் ஈடுபட்டுள்ளதாகவும் இதன் காரணமாக உள்ளுர் விமானசேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன