ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய கோரி புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் கிராம மக்கள் 154 நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோல கதிராமங்கலத்தில் 116வது நாளாக போராட்டம் நடக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் மக்கள் ஒன்றுகூடி, ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு கூட்டியக்கம் என்ற பெயரில் இயக்கத்தை கட்டமைத்து தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
முதல் கட்டப்போராட்டம் கைவிடப்பட்ட நிலையில் 2ஆம் கட்ட போராட்டத்தை கடந்த ஏப்ரல் 12-ம் திகதி ஆரம்பித்த மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
இதேபோல தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தப் போராட்டம் 116வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
எனினும் இதுவரை வரை மத்திய, மாநில அரசாங்கங்கள் தமது போராட்டங்களை கண்டுக்கொள்ளவில்லை என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.